close
Choose your channels

உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் 3 இந்தியர்கள்

Wednesday, June 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகப்புகழ் பெற்ற பத்திரிகையான ஃபோர்ப்ஸ், உலகில் அதிகம் சம்பளம் பெறும் 100 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜூன் 1, 2016 முதல் ஜூன் 1, 2017 வரையிலான வருமானத்தை கணக்கில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டிடி(Diddy) $130 மில்லியன் வருமானம் பெற்று முதலிடத்திலும், பியான்ஸ் $105 மில்லியன் வருமானம் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும் இந்த பட்டியலில் வின் டீசல் $54.5 மில்லியன் வருமானம் பெற்று 31வது இடத்திலும், ஜாக்கிசான் $49 மில்லியன் வருமானம் பெற்று 39வது இடத்திலும், கிம்கர்தர்ஷான் $45.5 மில்லியன் வருமானம் பெற்று 47வது இடத்திலும், டாம் குரூஸ் $43 மில்லியன் வருமானம் பெற்று 52வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய நடிகர்களை பொருத்தவரையில் ஷாருக்கான் ரூ.245 கோடி சம்பளம் பெற்று இந்த பட்டியலில் 65வது இடத்திலும், சல்மான் கான் ரூ.238 கோடியுடன் 71வது இடத்திலும், அக்சயகுமார் ரூ. 228 கோடியுடன் 80வது இடத்திலும் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.