close
Choose your channels

விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார்

Thursday, May 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெரிய நடிகர்கள் மீது விளம்பரத்திற்காக அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக அவ்வப்போது நீதிமன்றத்தில் வழக்கு, காவல்துறையில் புகார் ஆகியவை நடைபெற்று வருவதுண்டு. சமீபத்தில் கூட உலக நாயகன் கமல்ஹாசன் மீது வழக்கு மற்றும் காவல்துறையில் புகார் ஆகியவை செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று இளையதளபதி விஜய் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் ரசிகர் ஒருவர் வரைந்த விஜய்யின் ஸ்டில் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த ஸ்டில்லில் ஷூ அணிந்த விஜய் திரிசூலத்தை கையில் வைத்து நடனமாடுவது போல் உள்ளது. இந்த புகைப்படம் இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இந்து மக்கள் முன்னணி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது.
இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்டிருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.