close
Choose your channels

ஹிப் ஹாப் ஆதியின் 'மீசையை முறுக்கு' செய்த சாதனை

Monday, August 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷை அடுத்து ஹீரோவாக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் புதியதாக இணைந்துள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. ஆதி நடித்து, இயக்கிய 'மீசையை முறுக்கு' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது.

இரண்டு வாரங்களை கடந்தும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் இந்த படம் இரண்டாவது வார இறுதி நாட்களில் சென்னையில் 16 திரையரங்குகளில் 139 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.29,78,061 வசூல் செய்துள்ளது. அறிமுக ஹீரோ ஒருவரின் படத்திற்கு இரண்டாவது வாரத்திலும் 80% பார்வையாளர்கள் திரையரங்கில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் கடந்த ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகி நேற்று முதல் ரூ.2,05,12,560 வசூல் செய்துள்ளது. சென்னையில் அறிமுக ஹீரோ ஒருவரின் படம் வசூல் செய்த அதிகபட்ச தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.