close
Choose your channels

வைக்கம் விஜயலட்சுமிக்கு அமெரிக்க பல்கலை தந்த கெளரவம்

Friday, July 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனது இனிமையான குரலின் மூலம் தமிழ், மலையாள திரைப்படங்களில் பல படங்களில் பாடியுள்ளார். குக்கூ, பட்டதாரி', 'என்னமோ ஏதோ, வெள்ளைக்காரத் துரை, ரோமியோ ஜூலியட், வீர சிவாஜி, தெறி, உள்பட பல திரைப்படங்களில் பாடிய வைக்கம் விஜயலட்சுமி, எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி' படத்தில் இடம்பெற்ற யாரு இவன் யாரு இவன்` என்ற பாடலையும் மிக அற்புதமாக பாடியிருந்தார்.
வைக்கம் விஜயலட்சுமியின் இசையுலக சாதனையை பாராட்டி இவரை கெளரவிக்கும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த உலக தமிழ் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் வழங்கியுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் இந்த பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்ற விஜயலட்சுமிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கு பிரிட்டனில் உள்ள வேர்ல்ட் ரிக்கார்ட் யூனிவர்சிட்டி (WRU University) கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.