close
Choose your channels

ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்து செல்லும் அஜித்தின் ஃபர்ஸ்ட்லுக்

Wednesday, February 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'அஜித் 57' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்னும் ஒருசில மணி நேரங்களில் வெளியாகவுள்ள நிலையில் இந்த ஃபர்ஸ்ட்லுக் குறித்த அட்வான்ஸ் தகவல்களை தற்போது தருகிறோம்.

இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் அஜித் இதுவரை இல்லாத வகையில் வெற்று உடம்புடன் அட்டகாசமான தோற்றத்தில் உள்ளார். அஜித்தின் இந்த ஆச்சரியமான லுக்கினால் அஜித் ரசிகர்கள் உள்பட அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உறைய போவது நிச்சயம்.

ஏற்கனவே கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் அஜித் ஸ்டில்ஸ்கள் சர்வதேச தரத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இன்று நள்ளிரவு வெளியாகும் அதிகாரபூர்வமான ஃபர்ஸ்ட்லுக் ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிறுத்தை சிவாவின் V செண்டிமெண்ட் படியும் ஏற்கனவே கசிந்த செய்திகளின்படியும் இந்த படத்தின் டைட்டில் 'விவேகம்' தான் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.