close
Choose your channels

எனது பெயரில் அஜித் படத்தலைப்பு. பிரபல பாடலாசிரியர்

Thursday, February 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து வரும் 57வது படமான 'விவேகம்' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை வெளிவந்து உலகம் முழுவதும் இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அஜித்தின் பிட்னெஸ் உடலமைப்பு, அட்டகாசமான பின்னணியை அஜித் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை கோலிவுட் திரையுலகினர் தங்களுடைய சமூக வலைத்தளத்தை பாராட்டியும், வாழ்த்துக்கள் தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் பாடல் ஒன்றை எழுதியுள்ள பிரபல பாடலாசிர்யர் விவேகா, தன்னுடைய பெயர் இனிஷியலுடன் படத்தின் டைட்டிலாக அமைந்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இவருடைய பெயர் விவேகா M என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த் நடித்த 'எனக்குள் ஒருவன்' படத்தின் மூலம் பாடலாசிரியர் ஆன விவேகா, '36 வயதினிலே', 'ஒருநாள் கூத்து', 'கபாலி', 'ரெமோ', 'கொடி' உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.