close
Choose your channels

ரஜினி படத்தை இயக்குவது எப்போது? ராஜமெளலி பதில்

Thursday, May 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.750 கோடி வசூல் செய்து ஆச்சரியப்பட வைத்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்த ரூ.1000 கோடி வசூலை இந்த படம் இன்னும் ஒருசில நாட்களில் நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிபிசி ஊடகத்திற்கு பேட்டி அளித்த ராஜமெளலி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்குவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, 'இந்திய திரையுலகில் ரஜினிகாந்த் மிகப்பெரிய ஸ்டார். அவரிடம் கால் ஷீட் கிடைக்காதா என்று பலரும் காத்திருக்கின்றனர். ரஜினியை வைத்து இயக்குவதற்கு, ஒரு நல்ல கதை கிடைத்து, வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக இயக்குவேன். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதை பாக்கியமாக கருதுவேன்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே 'பாகுபலி 2' படத்தை பார்த்து ரஜினி வாழ்த்தியதும், ரஜினி வாழ்த்தியதை, கடவுளே வந்து வாழ்த்தியது போல் உணர்வதாக தெரிவித்து ராஜமெளலி நன்றியும் தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜமெளலி கூறியது போல் கதையும், வாய்ப்பும் கிடைத்து அவர் ரஜினி படத்தை இயக்குவாரா என்பதையும், ஒருவேளை அவ்வாறு இயக்கினால் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியதை போல 'அவதார்' பட சாதனையை அந்த படம் முறியடிக்குமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.