close
Choose your channels

விஜய்-ஜெயம்ரவி படங்களின் மேஜிக் ஒற்றுமை

Thursday, May 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லி இயக்கத்தில் இளைதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும், அவற்றில் ஒன்று மேஜிக்மேன் வேடம் என்பதையும் சமீபத்தில் பார்த்தோம். விஜய்யை முதன்முதலாக மேஜிக்மேனாக பார்க்க அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ஆர்வத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஜெயம் ரவியும் தனது அடுத்த படத்தில் மேஜிக்மேனாக நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள 'வனமகன்' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள அவர் நடித்து வரும் இன்னொரு படம் 'டிக் டிக் டிக்'. 'மிருதன்' இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவி மேஜிக்மேனாக நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஒரே நேரத்தில் விஜய்யும், ஜெயம் ரவியும் மேஜிக்மேனாக நடித்து வருவது அபூர்வ ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.
தமிழின் முதல் விண்வெளி படமான 'டிக் டிக் டிக்' படத்தில் ஜெயம் ரவி, ஆரோன் அஜிஸ், நிவேதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தை நேமிசந்த் ஜெபக் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.