close
Choose your channels

40 வருடங்களுக்கு முந்தைய மருத்துவமனையில் விஜய்?

Wednesday, March 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய காட்சி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
நாற்பது வருடங்களுக்கு முன் அதாவது 1975 காலத்தின் மருத்துவமனை செட் ஒன்று சென்னை பின்னில் மில்லில் பிரபல கலை இயக்குனர் முத்துராஜ் அமைத்துள்ளதாகவும், இந்த மருத்துவமனை செட்டில் விஜய், நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் மூன்று வித்தியாசமான வேடத்தில் இளையதளபதி நடித்து வருகிறார் என்பதும் அதில் ஒன்று பஞ்சாயத்து தலைவர் வேடம் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
அட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.
இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய 'ஃபர்ஸ்ட்லுக்' வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளிவரும் என்றும், இந்த படத்திற்கு 'மூன்று முகம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட செய்தியையும் சற்று முன் பார்த்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.