close
Choose your channels

'புலி' டிரைலர் குறித்த முக்கிய தகவல்

Wednesday, August 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவு சரியாக 12மணிக்கு வெளியாகவுள்ளது. விஜய் ரசிகர்கள் தங்கள் தூக்கத்தையும் பொருட்படுத்தாமல் இன்று நள்ளிரவை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் இன்று வெளியாகவிருக்கும் டிரைலர் ஒரு நிமிடம் 55 வினாடிகள் என சென்சார் சர்டிபிகேட் மூலம் தெரியவந்துள்ளது. டிரைலர் வெளியாக இன்னும் 12 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில் இந்த டிரைலர் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், நந்திதா ஸ்வேதா, சத்யன், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரோபோ சங்கர் உள்பட ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ள இந்த படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. குறிப்பாக விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் பாடிய 'ஏண்டி ஏண்டி' பாடல் அனைத்து எப்.எம்களிலும் தொடர்ந்து ஒலிக்கப்பட்டு வருகிறது.

நட்டி நட்ராஜின் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். வரும் செப்டம்பர் 17, விநாயகர் சதுர்த்தி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக இந்த படம் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.