close
Choose your channels

இளையதளபதியின் 'தளபதி 61' படத்தின் அட்டகாசமான தலைப்பு

Wednesday, June 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டில் 'மூன்று முகம்' உள்பட பல டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜய்-அட்லி இணைந்த படத்திற்கு 'தெறி' என்ற வித்தியாசமான மாஸ் டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதே பாணியில் 'தளபதி 61' படத்திற்கு 'மெர்சல்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிகே சென்றுள்ளனர். மேலும் டைட்டிலுடன் வெளியாகியுள்ள முதல்பார்வை போஸ்டரில் விஜய் அட்டகாசமான ஸ்டைல் போஸ் உடன், ஜல்லிக்கட்டு பின்னணியில் உள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏற்கனவே விஜய் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையதளபதி விஜய்யின் 'மெர்சல்' டைட்டில் வெளியான சில நிமிடங்களிலேயே ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 'மெர்சலான டைட்டிலை தேர்வு செய்த படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.