close
Choose your channels

'தெறி'க்கு 147, 'தளபதி 61' படத்துக்கு 142: இது என்ன கணக்கு தெரியுமா?

Friday, May 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வால் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த படப்பிடிப்பை அடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும், இதில் விஜய், சமந்தா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்லுக் வரும் ஜுன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. எனவே ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் ஜூன் 22 என்பது படப்பிடிப்பு ஆரம்பித்த 142வது ஆகும். இதேபோல் விஜய்-அட்லியின் முந்தைய படமான 'தெறி' ஜூலை 1ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 147வது நாளன நவம்பர் 25ஆம் தேதி ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. எனவே 'தெறி'யை விட 5 நாட்கள் முன்னதாகவே 'தளபதி 61' பட ஃபர்ஸ்ட்லுக் வெளிவரவுள்ளதாக விஜய் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.