close
Choose your channels

இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து கொடுத்த இளையதளபதி

Monday, July 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் நோன்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பிரபலங்கள், அரசியல்வாதிகள், மற்றும் வி.ஐ.பிக்கள் இஸ்லாமிய நண்பர்களுக்கு இஃபதார் விருந்து கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இளையதளபதி விஜய் 100 இஸ்லாமியர்களுக்கு நேற்று இஃப்தார் விருந்து கொடுத்துள்ளார்.

விஜய் தனது கையாலே இஃபாதர் விருந்து பரிமாறியதால் விருந்துக்கு வந்தவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்ததாக விருந்தில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர். மேலும் இஃப்தார் விருந்து கொடுத்த விஜய் அவர்களுடன் உட்கார்ந்து விருந்து சாப்பிட்டார்.

இந்நிலையில் விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் செப்டம்பரில் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 59' திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.