close
Choose your channels

தளபதி 61: அசர வைக்கும் லொகேஷனில் அடுத்தகட்ட படப்பிடிப்பு

Saturday, April 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இரண்டு கட்டமாக முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக லொகேஷன் பார்க்க ராஜஸ்தான் சென்றிருக்கும் குழுவினர்களில் ஒருவரான ஒளிப்பதிவாளர் விஷ்ணு தனது சமூக வலைத்தளத்தில் ராஜஸ்தான் பாலைவனம் ஒன்றின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதேபோல் இந்த படத்தின் ஆடை வடிவமைப்பாளரான நீரஜாவும் ராஜஸ்தானின் அழகிய அரண்மனை புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
எனவே 'தளபதி 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள அழகிய அரண்மனை மற்றும் பாலைவனத்தில் படமாக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ராஜஸ்தான் படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாகவும், இதற்கான விசா பெறும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை அட்லி வருகிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துவரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.