close
Choose your channels

நெகட்டிவ் விமர்சனங்களை மீறி வெற்றி நடை போடுகிறது 'புலி'

Tuesday, October 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு ஊடகங்களும், சமூக வலைதளப் பயனாளிகளும் பெரும்பாலும் நெகடிவ் விமர்சனங்களை கொடுத்தாலும், இந்த விமர்சனங்கள் 'புலி' படத்தின் வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வசூல் தகவல்கள் நிரூபித்துள்ளன.

'புலி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.64 கோடி வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு எந்த பெரிய படமும் ரிலீஸ் ஆகும் சூழ்நிலை இல்லாததால், இந்த படம் ரூ.100 கோடி வசூலை விரைவில் எட்டிவிடும் என நம்பப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட கோலிவுட் திரையுலகினர் பலர் 'புலி' படத்திற்கு பாராட்டு தெரிவித்ததை அடுத்து இந்த படத்திற்கு குழந்தைகள் மற்றும் குடும்பஸ்தர்கள் வரவு கூடியுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.