close
Choose your channels

கமல்-ஸ்ருதி படத்தின் வித்தியாசமான தொடக்கவிழா

Tuesday, April 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தூங்காவனம்' படத்திற்கு பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் தொடக்கவிழா நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.


பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ள இந்த படத்தில் முதல்முதலாக கமல்ஹாசன் தன்னுடைய மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார். 'பாகுபலி' புகழ் ரம்யாகிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்க இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் தொடக்கவிழா நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி யூடியூப் இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பு உண்டு என்று கூறப்படுகிறது. முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ள இந்த படத்தின் தொடக்கவிழாவே பிரமாண்டமாகவும் வித்தியாசமாகவும் அமையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளாதாக செய்திகள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.