close
Choose your channels

அருண்ராஜா காமராஜ் கிரிக்கெட் படத்தில் பிரபல கிரிக்கெட் வீராங்கனை

Tuesday, September 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாடகர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் பெண்கள் கிரிக்கெட் குறித்த ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த ஆடிசன் நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடியவரும், இந்திய மகளிர் அணிக்கு உதவி பயிற்சியாளராக இருந்தவருமான தேவிகா பல்ஷிகார் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும் தனது கிரிக்கெட் விளையாட்டின் அனுபவங்களை இயக்குனர் அருண்காமராஜூடன் பகிர்ந்து கொள்ளவிருப்பதாகவும், இதனால் இந்த படத்தின் திரைக்கதை மேலும் மெருகேறும் என்றும் கூறப்படுகிறது.
தேவிகா தனக்கு திரைக்கதையில் உதவ முன்வந்திருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும், இந்த படம் உண்மை சம்பவங்களுடன் கூடிய விறுவிறுப்பான படமாக அமைய, அவருடைய பங்கு அதிகம் இருக்கும் என்றும் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார். மேலும் இந்திய அணியில் உள்ள வீராங்கனைகள் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்து ஆர்வம் உள்ள வீராங்கனைகள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.