close
Choose your channels

பொங்கல் ரேஸில் இணைந்த விஷால் படம்

Saturday, September 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் 2018ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீயான் விக்ரம், தமன்னா நடிப்பில் விஜயசந்தர் இயக்கி வரும் 'ஸ்கெட்ச்' படமும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தற்போது விஷாலின் 'இரும்புத்திரை' படமும் பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் விஷாலின் 'துப்பறிவாளன்' படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

விஷால், அர்ஜூன், சமந்தா, மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் ரூபன் படத்தொகுப்பும் செய்கிறார்கள். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.