close
Choose your channels

'விஜய் 59' படத்தின் புதிய டைட்டில்?

Monday, November 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு 'வெற்றி' அல்லது 'காக்கி' என்ற டைட்டில் வைக்கப்படலாம் என கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கு 'தாறுமாறு' என்ற டைட்டிலை படக்குழுவினர் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு படக்குழுவினர்களிடம் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே டைட்டில் ஜீவா நடிக்கவிருந்த ஒரு படத்திற்கு முடிவு செய்யப்பட்டது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் அந்த படம் டிராப் ஆகிவிட்டது.

விஜய் 59' படத்திற்கு 'தாறுமாறு' என்ற டைட்டிலை படக்குழுவினர் வைக்கின்றார்களோ இல்லையோ, கண்டிப்பாக இந்த படம் விஜய், சமந்தா, எமிஜாக்சன், அட்லி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இணைந்திருப்பதால் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.