close
Choose your channels

சகலகலாவல்லவனுடன் கனெக்ஷன் ஆகும் பாயும்புலி

Sunday, July 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய படங்கள் உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுராஜ், தற்போது இயக்கி முடித்துள்ள திரைப்படம் 'சகலகலாவல்லன் அப்பாடக்கர். ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் 31ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில், சுராஜ் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

சுராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஷால் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை அவர் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் 'பாயும் புலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் செப்டம்பரில் ரிலீஸாகவுள்ள நிலையில் விஷால் அடுத்து பாண்டிராஜ் மற்றும் லிங்குசாமி படங்களில் நடிக்கவுள்ளார். இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு, விஷால், சுராஜ் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷால்-சுராஜ் இணையும் திரைப்படம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் இருந்தாலும், கண்டிப்பாக இந்த படம் உறுதியாகும் என்றும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையை அணுகவிருப்பதாகவும் சுராஜ் தரப்பிடம் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவியை அடுத்து மற்றொரு இளையதலைமுறை நடிகரான விஷாலுடன் சுராஜ் இணையவிருக்கும் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.