close
Choose your channels

சசிகலா தியாகி, ஓபிஎஸ் துரோகியா? விஜயசாந்திக்கு கடும் கண்டனம்

Monday, February 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக சட்டசபையில் கடந்த சனிக்கிழமை நடந்த ஜனநாயக கேலிக்கூத்து அனைவரும் அறிந்ததே. எதிர்க்கட்சி உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற பெயரில் நடந்த ஜனநாயக கொலையை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ தயாராக இல்லை. மக்களின் கருத்துக்களுக்கு எதிராக வாக்களித்த 122 எம்.எல்.ஏக்களின் நிலைமை என்ன என்பதை இனிதான் பார்க்க வேண்டும்
இந்நிலையில் எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவதை போல மக்களின் உணர்ச்சியை மேலும் தூண்டும் வகையில் நடிகையும் தெலுங்கானா மாநில அரசியல்வாதியுமான விஜயசாந்தி பேசியுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி மலர்ந்துள்ளதாகவும், 122 எம்.எல்.ஏக்களையும் ஓபிஎஸ் போன்ற தீய சக்தியில் இருந்து சசிகலா காப்பாற்றியதாகவும், அவர் செய்த தியாகத்தால்தான் இன்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி மலர்ந்துள்ளதாகவும், சசிகலாவின் சபதம் நிறைவேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விஜயசாந்தியின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இதுகுறித்து கூறியபோது, 'விஜயசாந்திக்கு பெரிய அரசியல் வித்தகர் என்ற நினைப்பா! கருத்துகளை உங்கள் மாநிலத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இது சினிமா அல்ல! எங்கள் வாழ்க்கை!' என்று கூறியுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தன் மட்டுமின்றி பெரும்பாலானோர் விஜயசாந்திக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விஜயசாந்தி பாஜகவில் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் தனிக்கட்சி தொடங்கி, அந்த கட்சியையும் தெலுங்கானா ராஷ்டிர கட்சியில் இணைத்து, அதன்பின்னர் முதலமைச்சர் பதவி ஆசை காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு தாவியவர். பதவிக்காக பச்சோந்தி போல் கட்சி விட்டு கட்சி மாறும் விஜயசாந்தி, 1977ஆம் ஆண்டில் இருந்து ஒரே கட்சியில் பணியாற்றி வரும் ஓபிஎஸ் அவர்களை பார்த்து துரோகி என்று கூறுவதா? என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜயசாந்தியின் பச்சோந்திதனத்தை தெலுங்கானா மக்கள் அறிந்துதான் அவரை படுதோல்வி அடைய செய்து படுகுழியில் தள்ளியுள்ளனர். இப்போதைக்கு அவருக்கு அரசியல் எதிர்காலமே இல்லை என்ற நிலை தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ளது. சொந்த மாநிலத்தில் குப்பை கொட்ட முடியாத அவர் தமிழகம் குறித்து எந்த கவலையும் பட தேவையில்லை என்பதே தமிழக மக்களின் கருத்தாக உள்ளது. தமிழக மக்களுக்கான முதல்வராக வரவேண்டியவர் யார், தீய சக்தி யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். தியாகம் செய்தது யார், துரோகம் செய்தது யார் என்பதை தமிழக மக்களுக்கு விஜயசாந்தி போன்ற பச்சோந்திகள் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடந்த கருப்பு தினத்தை மக்கள் அடக்கவும் முடியாமல் கொந்தளிக்கவும் முடியாமல் உள்ளனர். அவர்களை விஜயசாந்தி போன்றோர் தூண்டிவிட்டால் மக்கள் சக்தி என்னும் எரிமலையில் பொசுங்க வேண்டிய நிலை ஏற்படும். நீங்கல் வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் உங்கள் தியாகத்தலைவியை வாழ்த்திக்கொள்ளுங்கள், போற்றி கொள்ளுங்கள், ஆனால் தயவுசெய்து ஊடகங்களில் பேட்டி அளிக்கும்போது மக்களின் மனதையும் புரிந்து கொண்டு கருத்தை தெரிவிக்க வேண்டும் என விஜயசாந்தி போன்றவர்களுக்கு கோரிக்கையாக வைக்கப்படுவதாக அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.