close
Choose your channels

ஜெமினிகணேசன் பெயரில் நடிகர் ஜீவா

Monday, November 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ஆசை ஆசையாய்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் ராம், ஈ, சிவா மனசுல சக்தி, கோ, நீதானே என் பொன்வசந்தம் உள்பட பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் ஜீவா, தற்போது நயன்தாராவுடன் 'திருநாள்', காஜல் அகர்வாலுடன் 'கவலை வேண்டாம்' மற்றும் ஹன்சிகாவுடன் 'போக்கிரி ராஜா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் முத்துராமன் இயக்கவுள்ள புதிய படம் ஒன்றில் ஜீவா நடிக்கின்றார். இந்த படத்திற்கு 'ஜெமினிகணேசன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், சிவாஜி உச்சத்தில் இருந்த காலத்தில் தனக்கென ஒரு பாணியை அமைத்து அதில் வெற்றி நடைபோட்டு வந்தவர் ஜெமினிகணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டைட்டிலுக்காக படக்குழுவினர் ஜெமினிகணேசனின் குடும்பத்தினரிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.