close
Choose your channels

ஒரே மாதத்தில் முடிவடையும் ஜீவா படத்தின் படப்பிடிப்பு

Saturday, May 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லி தயாரிப்பில் ஜீவா நடித்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு 'கீ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நாடோடிகள், ஈட்டி, மிருதன் மற்றும் சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' போன்ற திரைப்படங்களை தயாரித்த குளோபல் இண்ட்போடெயின்மெண்ட் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் 'கீ' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக வளர்ந்து வரும் கோலிவுட் நாயகி நிக்கி கல்ராணி நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இரண்டாவது நாயகியாக அணைகாசோடி நடிக்கின்றார். மேலும் R.J. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுஹாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன் ஆகியோர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்தப்பட்டு வரும் 20ஆம் தேதி முடிகிறது. விஷால் சந்திரசேகர் இசையில் அனிஷ் தருண்குமார் ஒளிப்பதிவில் நாகூரன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை காலீஸ் என்பவர் இயக்கி வருகிறார். இவர் பிரபல இயக்குனர் செல்வராகவன் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.