close
Choose your channels

விஜய் பிறந்த நாளில் ஃபர்ஸ்ட்லுக், சூர்யா பிறந்த நாளில் டீசர்?

Tuesday, June 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபர்ஸ்ட்லுக் விஜய் ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்த நாள் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யை அடுத்து சூர்யாவும் தனது ரசிகர்களுக்கு வரும் ஜூலை 23ஆம் தேதி அதாவது அவருடைய பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது அவருடைய பிறந்த நாளில் அவர் நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் வெளிவர வாய்ப்பு உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

ஏற்கனவே 'இனிமேலும் கலாய்க்க வேண்டாம், விரைவில் டீசரை வெளியிடுகிறேன்' என்று 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் கூறிய நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரின் பணி முடியும் நிலையில் உள்ளதாகவும், எடிட்டிங் மற்றும் சென்சார் பணிகள் முடிவடைந்து சூர்யாவின் பிறந்த நாளில் இந்த படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.