close
Choose your channels

ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் தேதி

Monday, March 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் நயன்தாரா, த்ரிஷா ஆகிய நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வரும் நிலையில் ஜோதிகாவும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் தான் 'மகளிர் மட்டும்'

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படம் வரும் மே மாதம் 12ஆம் தேதி ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இன்னும் ஓரிருநாளில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது.

ஜோதிகா, நாசர், லிவிங்ஸ்டன், சரண்யா, பானுப்ரியா, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 'குற்றம் கடிதல்' இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மணிகண்டன் ஒளிப்பதிவும், பிரேம் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.