close
Choose your channels

'விஜய் 61' படத்தின் நாயகி திடீர் மாற்றம்?

Tuesday, February 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால், சமந்தா மற்றும் ஜோதிகா ஆகிய மூன்று நாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவராக ஜோதிகா திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக 'ஓகே கண்மணி' நாயகி நித்யாமேனன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ஜோதிகா இந்த படத்தின் போட்டோஷூட்டில் கலந்து கொண்ட நிலையில் திடீரென மாற்றப்பட்டதன் காரணம் குறித்த தகவல் வெளிவரவில்லை. எனினும் வேறு எந்த பெரிய மாற்றமும் படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கி வரும் இந்த படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.