close
Choose your channels

'காக்கா முட்டை'க்கு கிடைத்த மேலும் ஒரு அந்தஸ்து

Wednesday, April 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷின் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான 'காக்கா முட்டை' திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது, உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றது முதல் தேசிய விருது பெற்றது வரை பல பெருமைகளை பெற்றுள்ளது.

சென்னையின் ஸ்லம் பகுதியில் உள்ள இரண்டு சிறுவர்கள் பீட்சா வாங்குவதற்காக சிறுக சிறுக பணம் சேமித்து வைப்பதும் பின்னர் அவர்கள் பீட்சாவை வாங்கி சாப்பிட்டார்களா? என்பதுதான் இந்த படத்தின் கதை. விருது பெற்ற படங்கள் வசூலிலும் வெற்றி பெறும் என்பதை முதன்முதலில் நிரூபணம் செய்தது இந்த படம்.
இந்நிலையில் இந்த படம் தற்போது மராத்தி மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. Samit Kakkad இயக்கவுள்ள இந்த படத்தை நானுபாய் ஜெய்சிங்கானி என்பவர் தயாரிக்கவுள்ளார். இந்த படம் மும்பையை மையமாக கொண்டு உருவாக்கப்பட உள்ளகவும், அதற்காக ஒருசில மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.