close
Choose your channels

மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மானின் 'காற்று வெளியிடை' டிராக்லிஸ்ட்

Saturday, March 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றவர். அன்று முதல் இன்று வரை மணிரத்னம் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வரும் ரஹ்மான், தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள 'காற்று வெளியிடை' படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வரும் திங்கள் அன்று வெளியாகவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளிவந்துள்ளது. மொத்தம் ஆறு பாடல்கள் உள்ள இந்த டிராக்லிஸ்ட் குறித்து தற்போது பார்ப்போம்

1. 'நாளை அலை' என்று தொடங்கும் வைரமுத்து எழுதிய பாடலை சத்யபிரகாஷ், சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர்.

2. 'அழகியே' என்று தொடங்கும் 2வது பாடலை கார்க்கி எழுத அர்ஜூன் சாண்டி, ஹரிச்சரண், ஜோனிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர்.

3. 'வான்' என்று தொடங்கும் அடுத்த பாடலை வைரமுத்து எழுத ஷாஷா திருப்பதி பாடியுள்ளார்

4. 'சாரட்டு வண்டியிலே' என்ற வைரமுத்து எழுதிய பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், திப்பு, நிகிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர்.

5. 'டாங்கோ கேளாயோ' என்ற வைரமுத்துவின் பாடலை ஹரிச்சரண், திவாகர் ஆகியோர் பாடியுள்ளனர்.

6. 'ஜக்னி' என்ற ஷெல்லி பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், டிஜேந்தர் சிங் அவர்களும் ராப் போர்ஷனை ராஜகுமாரி, ஷகிராவும் குரல் கொடுத்துள்ளனர்

மணிரத்னம்-ரஹ்மான் இணைந்த படங்களின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.