close
Choose your channels

கபாலி, விஜய் 59' படங்களின் ரிலீஸ் தேதி?

Sunday, November 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ்.தாணு தற்போது ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' மற்றும் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.

'கபாலி' படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விரைவில் கோவாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த இரு படங்களின் வியாபாரத்தையும் தாணு தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த இரு படங்களையும் அடுத்தடுத்து 15 நாட்கள் இடைவெளியில் அவர் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது வந்த தகவலின்படி 'கபாலி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதியும், 'விஜய் 59' படம் வரும் மே மாதம் 1ஆம் தேதியும் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.