close
Choose your channels

அஜித்-விஜய்: டான்ஸில் யார் பெட்டர்? காஜல் அகர்வால் அளித்த பதில்

Saturday, March 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோர்களின் படங்களில் ஒரே நேரத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு ஒருசிலருக்குத்தான் கிடைக்கும். சமீபத்தில் 'புலி' மற்றும் 'வேதாளம்' படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்தார். அதுபோல் தற்போது அஜித்தின் 'விவேகம்' மற்றும் விஜய்யின் 'தளபதி 61' ஆகிய படங்களில் நடித்து வருபவர் காஜல் அகர்வால்
இந்த நிலையில் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த காஜல் அகர்வால், இருவரில் டான்ஸில் யார் பெட்டர் என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, 'அஜித், விஜய் இருவருமே அவரவர் தனிப்பட்ட ஸ்டைலில் நடனம் ஆடுபவர்கள். இருவரின் நடனத்தை ஒப்பிட முடியாது. அவரவர் பாணியில் இருவருமே சிறப்பான முறையில் டான்ஸ் ஆடுகின்றனர் என்று பதிலளித்தார்.
மேலும் 'விஜய்யுடன் ஏற்கனவே இரு படங்களில் நடித்துள்ளதால் அவரை பற்றி ஓரளவுக்கு தெரியும். விஜய்யின் நுணுக்கங்களை நான் நன்றாக அறிந்து வைத்திருந்தேன். அனைத்து விஷயங்களையும் அவருடன் எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். அஜித் மிகவும் அமைதியான நடிகர், அவருடைய காட்சியில் அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் நடிப்பார். மேலும் அவர் படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடனும் நட்புடன், அனைவரும் விரும்பும் வகையில் நடந்து கொள்வார்' என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.