close
Choose your channels

'தளபதி 61' குறித்த முக்கிய ரகசியத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்

Tuesday, March 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் முதல்கட்ட படபிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படப்பிடிப்பு சென்னை அருகே விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவராகிய காஜல அகர்வால் தனது கேரக்டர் குறித்தும் விஜய் கேரக்டர் குறித்தும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

தளபதி 61' படத்தில் நானும் இளையதளபதி விஜய்யும் ஒரே இடத்தில் ஒரே பணியில் இருக்கும் கேரக்டர்கள். நாங்கள் பணிபுரியும் இடத்தில்தான் முதன்முதலில் சந்திக்கின்றோம்' என்று கூறியுள்ளார். இந்த படத்தில் விஜய்யின் மூன்றாவது கேரக்டர் ஸ்டைலிஷான நகரத்து இளைஞன் கேரக்டர் என்பதும் இந்த கேரக்டருக்குத்தான் காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கின்றார் என்றும் ஏற்கனவே தகவல்கள் கசிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.