close
Choose your channels

'விவேகம்' படப்பிடிப்பில் காஜல் இணைவது எப்போது?

Friday, March 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பல்கேரியாவில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் உலக தரத்தில் கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பின் இரண்டு ஸ்டில்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி உலக அளவில் டிரெண்ட் ஆனது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்து வரும் காஜல் அகர்வால் இன்னும் ஒருசில நாட்களில் பல்கேரியா சென்று படக்குழுவினர்களுடன் இணைவார் என்று செய்திகள் வெளிவதுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கடைசி இருபது நாட்கள் அஜித், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என கூறப்படுகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'விவேகம்' படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.