close
Choose your channels

சமுத்திரக்கனியின் அடுத்த படத்தில் 'காக்கா முட்டை' சிறுவன்?

Saturday, November 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தற்போது கோலிவுட் திரையுலகில் இரண்டாம் பாக சீசன் களைகட்டியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அஜீத்தின் பில்லா 2' படத்தில் தொடங்கி விரைவில் ஆரம்பமாகவுள்ள 'எந்திரன் 2' வரை அனைத்து இரண்டாம் பாக படங்களும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது தற்போது சமுத்திரக்கனியின் 'சாட்டை' படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

அறிவழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனியின் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த 'சாட்டை' திரைப்படம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்க சமுத்திரக்கனி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சமுத்திரக்கனியுடன் முதல் பாகத்தில் நடித்த தம்பி ராமையாவும் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் 'காக்கா முட்டை' படத்தில் நடித்த தேசிய விருது பெற்ற சிறுவனுக்கும் முக்கிய கேரக்டர் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.