close
Choose your channels

எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர் கருணாநிதி: கமல்ஹாசன் புகழாரம்

Sunday, May 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து பரபரப்பாக தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கமல் தெரிவித்துள்ளார். கருணாநிதி தன்னைவிட வயதில் மூத்தவராக இருந்தாலும் வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை என்றும், தமிழ் உணர்வு இருந்தால் போதும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர்கள் கருணாநிதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன் ஆகியோர்கள் என்றும் கருணாநிதியின் வசனங்களை பேசிவிட்டால் ஒரு நடிகர் முழு தகுதி பெற்றவராகிறார் என்றும் கூறிய கமல், அரசியலையும் தாண்டி பல்வேறு துறைகளில் தனது முத்திரையை பதித்த கருணாநிதி சிறந்த திரைக்கதை ஆசிரியர், வசனம் எழுதக் கூடியவர் என அவருக்கு புகழாரம் சூட்டினார்.

தசாவதாரம் படத்திபோது கருணாநிதி கையால் கிள்ளப்பட்ட கன்னம் என் கன்னம் என்று கூறிய கமல், சட்டப்பேரவையில் வைரவிழா காணும் கருணாநிதிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.