close
Choose your channels

'விஸ்வரூபம் 2' குறித்த முக்கிய தகவல்: கமல் அறிவிப்பு

Tuesday, May 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம்' திரைப்படம் பெரும் பிரச்சனைகளை சந்தித்து கடந்த 2013ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஒருசில மாத இடைவெளியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தயாரிப்பு தரப்பின் தாமதம் காலமாக ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போனது.

இந்த நிலையில் 4 வருடங்களுக்கு பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை மீண்டும் சமீபத்தில் மீட்ட கமல்ஹாசன், மீதி வேலைகளை சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக செய்து வருகிறார். டப்பிங் உள்பட இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ஒரு பாடல் ரிகார்டிங் செய்யப்பட்டிருப்பதாக கமல் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் கடைசி பாடலான இந்த பாடலை கமல்ஹாசனே எழுதியுள்ளதாகவும், இந்தி பாடலை பிரசூன் ஜோஷி எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெகுவிரைவில் இந்த பாடலின் தெலுங்கு பதிப்பும் ரிகார்டிங் செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல் பாக வெற்றியால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஸ்வரூபம் 2' படத்தில் கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

விரைவில் விஸ்வரூபத்தின் பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு இங்கே. மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை . நன்றி ஜிப்ரனுக்கும் பாடகர்களுக்கும்

— Kamal Haasan (@ikamalhaasan) May 23, 2017

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.