close
Choose your channels

கமல் குடும்பத்தில் உருவாகும் மேலும் ஒரு இயக்குனர்

Monday, June 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசனின் குடும்பம் ஒரு சினிமா பல்கலைக்கழகம் என்று கூறினால் அது மிகையாகாது. கமல்ஹாசன், கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன், அவரது மகள் சுஹாசினி ஆகிய மூவருமே தேசிய விருது பெற்ற நட்சத்திரங்கள். மேலும் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் இருவருமே நடிகைகளாக உள்ளனர். இதில் அக்சராஹாசன் உதவி இயக்குனராகவும் உள்ளார்

இந்த நிலையில் ஸ்ருதிஹாசனும் விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஸ்ருதிஹாசன் தற்போது ஒரு படத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் விரைவில் அவர் இயக்குனராக அறிமுகமாகும் படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடிகர் மட்டுமின்றி இயக்கம் உள்பட பலதுறைகள் வல்லவராக இருந்து வரும் நிலையில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதற்கேற்ப அவரது மகள் ஸ்ருதிஹாசனும் பல்வேறு துறைகளில் காலடி எடுத்து வைத்து வெற்றி பெற்று வருகிறார். இசையமைப்பாளர், பாடகி, நடிகை போன்ற துறைகளில் ஜொலித்து வரும் ஸ்ருதிஹாசன் விரைவில் இயக்குனராகி கோலிவுட்டுக்கு பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.