close
Choose your channels

பழைய கேரக்டருக்கு மீண்டும் திரும்பும் கமல்ஹாசன்

Thursday, April 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகவுள்ளதாகவும், இந்த படத்தின் தொடக்கவிழா நாளை நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெறவுள்ளதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தில் கமல் ஏற்று நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. கமல் இதுவரை பல மாறுபட்ட கேரக்டர்களில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. கிட்டத்தட்ட அவர் ஏற்காத கேரக்டர்களே இல்லை என்ற நிலையில் அவர் ஏற்கனவே ஏற்று நடித்த முக்கியமான ஒரு கேரக்டரையே இந்த படத்திற்கும் அவர் தேர்வு செய்துள்ளதாகவும், அந்த கேரக்டர் எது என்பதை நாளைய தொடக்க விழாவில் அவர் அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ள இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ்குமார் இயக்கவுள்ளார். இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.