close
Choose your channels

உத்தம வில்லன்' படத்திற்கு 'லாஸ் ஏஞ்சல்ஸ்' விருது கிடைக்குமா?

Sunday, November 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

Los Angeles Independent Film Festival Awards என்ற விழா ஒவ்வொரு வருடமும் ஹாலிவுட் மற்றும் பிறநாடுகளின் சிறந்த படங்களுக்கு விருது வழங்கும் விழாவாக நடைபெற்று வருகிறது.

2015ஆம் ஆண்டுக்குரிய விருது வழங்கும் விழா வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில் இந்த விருதுக்கு தகுதி பெறும் திரைப்படங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான 'உத்தம வில்லன்' திரைப்படத்தை இந்த விருதுக்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இசையமைபபளர் மற்றும் சிறந்த சவுண்ட் டிசைன் ஆகிய பிரிவுகளில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

உத்தம வில்லன்' வசூல்ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விருதுகளை குவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.