close
Choose your channels

பள்ளிப் பருவத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன். கமல்ஹாசன்

Friday, September 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பள்ளி பருவத்தை நினைவில் கொண்டு வரும் வகையில் பல திரைப்படங்கள் கோலிவுட் திரையுலகில் உருவாகியுள்ள நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகவுள்ள மற்றொரு படம் 'பள்ளி பருவத்திலே' நந்தன்ராம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் 'காதல் கசக்குதய்யா' பட நாயகி வெண்பா நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, R.K.சுரேஷ் , பொன்வண்ணன், K.S.ரவிக்குமார், கஞ்சா கருப்பு, ஊர்வசி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை வாசுதேவ் பாஸ்கர் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை பார்த்த உலக நாயகன் கமல்ஹாசன், 'இந்த படம் ஒவ்வொருவருடைய பள்ளி பருவத்திலே உள்ள ஞாபகங்களை நினைவுபடுத்தும். நந்தனராம், வெண்பா மாணவர்களாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். எனக்கும் என் பள்ளி பருவத்திலே காலங்களை ஞாபகப்படுத்துகிறது. பள்ளி பருவத்திலே படத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சற்றுமுன்னர் இந்த படத்தின் போஸ்டரை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.