close
Choose your channels

கார்த்தி நாகார்ஜுனன் படத்தின் டைட்டில் அறிவிப்பு

Sunday, July 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மெட்ராஸ், கொம்பன் என தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் கார்த்தி, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனனுடன் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சென்னை, ஐதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ள இந்த படத்தின் நாயகியாக தமன்னா நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்திற்கு இதுவரை டைட்டில் வைக்கப்படாமல் இருந்தது. இரு மொழிகளுக்கும் பொருந்தும் வகையில் ஒரே தலைப்பாக இந்த படத்திற்கு வைக்க வேண்டும் என இயக்குனர் வம்சி விரும்பியதாகவும் அதற்கேற்றவாறு தலைப்பை தயார் செய்யும்படி தனது உதவியாளர்களிடம் அவர் கூறியதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் கார்த்தி, நாகார்ஜுனன் நட்பை விளக்கும் விதமாக இந்த படத்திற்கு 'தோஸ்த்' என்ற தலைப்பை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் தமிழில் பெயர் வைத்தால்தான் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால் கடைசி நேரத்தில் தமிழுக்கு வேறு டைட்டில் வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த வாரம் ஐரோப்பிய நாடுகள் படப்பிடிப்பு நடைபெறவுள்ள இந்த படத்தில் நடிகை ஜெயசுதா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், சிறப்பு தோற்றத்தில் அனுஷ்கா ஷெட்டியும் நடிக்கவுள்ளனர். கோபிசுந்தர் இசையமைக்கும் இந்த படத்திற்கு பி.எஸ். வினோத் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்கின்றனர். பிவிபி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.