close
Choose your channels

'மெர்சல்' படத்திற்கு போட்டியாகும் பெரிய ஹீரோ படம்

Wednesday, August 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் 'மெர்சல்'. இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இன்னொரு பெரிய பட்ஜெட் படமும் அதே தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கார்த்தி நடிப்பில் 'சதுரங்க வேட்டை' இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்டமான பெரிய பட்ஜெட் படமான 'தீரன் அத்தியாயம் ஒன்று' திரைப்படம் வரும் தீபாவளி ரிலீஸ் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தீபாவளி தினத்தில் 'ஹரஹர மகாதேவா', 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'குலேபகாவலி' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி, ராகுல் ப்ரித்சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ஷிவானந்தீஸ்வரன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.