close
Choose your channels

இது எனது கனவுப்படம் அல்ல. 'காற்று வெளியிடை இசை விழாவில் கார்த்தி

Monday, March 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா, கார்த்தி, அதிதி, சுஹாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கார்த்தி, மணிரத்னம் அவர்களிடம் உதவியாளராக இருந்தது முதல் இந்த படத்தில் நடித்தது வரையிலான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது: இது எனது கனவுப்படம் என்றால் அது நிச்சயமாக பொய்தான். ஏனெனில் இவ்வளவு அழகான கனவை நான் இதுவரை கண்டதில்லை. அமெரிக்காவில் பொறியியல் படித்துவிட்டு சினிமாவுக்கு போகிறேன் என்றதும் பலர் என்னை ஆச்சரியமாக பார்த்தனர். ஆனால் எனக்கு மணிரத்னம் அவர்களிடம் தொழில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரே நினைப்புதான் மனதில் இருந்தது. அதனால்தான் சினிமாவுக்கே வந்தேன்

அவரை முதன்முதலாக பார்த்து உதவியாளராக சேர அனுமதி கேட்டபோது அவர் என்னை தாராளமாக வரவேற்பதாக கூறினார். உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது 'நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடி' என்று அவர் கூறினார். அவர் கூறியபடியே சரியான சந்தர்ப்பமாக 'பருத்திவீரன்' வாய்ப்பு கிடைத்து அந்த படம் வெற்றியும் பெற்றதால் இன்று ஒரு நடிகராகியுள்ளேன். அவர் கொடுத்த தைரியம் தான் என்னை நடிகனாக்கியது

'காற்று வெளியிடை' படத்தின் ஸ்கிரிப்டை கொடுத்து என்னை படிக்க சொன்னார். நான் படித்து முடித்ததும் இந்த கேரக்டருக்கு நான் பொருத்தமானவனா? என்று எனக்கே சந்தேகம் ஏற்பட்டது.

இந்த படத்தின் பைலட் கேரக்டர் எனக்கு அனுபவம் இல்லாத ஒரு புதிய கேரக்டர். எனக்கு அந்த கேரக்டரை புரிந்து கொள்ளவே கஷ்டமாக இருந்தது. இதற்காகவே நான் பைலட் அருகில் உட்கார்ந்து பயணம் செய்து பல அனுபவம் பெற்றேன். மணிரத்னம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டராகவே மாற்றிவிட்டார்.

இந்த படம் ஒரு போர்ப்படம் அல்ல, காதல் படம் தான். ஆனாலும் அந்த ஸ்பிரிட்டை கொண்டு வருவது என்பது ஒரு சவாலான விஷயம். இந்த படத்தில் என்னை பைலட்டாகவே மாற்றிய இயக்குனருக்கு எனது நன்றிகள்

ஒரு 'அலைபாயுதே' மாதிரியோ அல்லது ஒரு 'ஓகே கண்மணி' மாதிரியோ எதிர்பார்த்து இந்த படத்திற்கு வரவேண்டாம். ஆனால் இதுவும் லவ் ஸ்டோரிதான். ஒரு லவ் ஸ்டோரி படத்துக்கு போகிறோம் என்று எதிர்பார்த்து வாருங்கள். நிச்சயம் இந்த படம் உங்களுக்கு ஏமாற்றம் கொடுக்காது.

முதன்முதலாக ரஹ்மான் அவர்களின் இசையில் நடித்துள்ளேன். ஆரம்பகால ரஹ்மான் இசை போன்று ரம்யமான பாடல்கள். அந்த பாடல்களுக்கு நான் உதட்டசைக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி

பொதுவாக மணிரத்னம் படம் இருட்டாக என்றும் கூறுவார்கள். ஆனால் இந்த படம் எவ்வளவு பிரைட்டாக இருக்கின்றது என்பதை அனைவரும் படம் பார்த்த பின்னர் உணர்வீர்கள்

இவ்வாறு கார்த்தி பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.