close
Choose your channels

சூர்யா படத்தில் இணைந்த மேலும் ஒரு சீனியர் நடிகர்

Friday, June 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்த நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க சீனியர் நடிகர் கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 'அனேகன்' படத்திற்கு பின்னர் கார்த்திக் மீண்டும் நடிக்க ஒப்பந்தமான படம் இதுதான் என்பதும், அவர் சூர்யாவுடன் முதன்முதலாக நடிக்கின்றார் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது. மேலும் சூர்யாவின் தந்தை சிவகுமாரும் கார்த்திக்கின் தந்தை முத்துராமனும், 'ராஜராஜ சோழன், 'நவக்கிரகம்' உள்பட ஒருசில படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்க்கது.

ஏற்கனவே இந்த படத்தில் சீனியர் காமெடி நடிகர் செந்தில் மற்றும் நீண்ட இடைவெளிக்கு பின் சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சீனியர் நடிகரான கார்த்திக்கும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முக்கிய கேரக்டரை ஏற்றுள்ள கார்த்திக், அடுத்தகட்ட படப்பிடிப்பின்போது கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.