close
Choose your channels

கமல்ஹாசனுக்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜ் எடுக்கும் வித்தியாசமான முயற்சி

Saturday, June 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும் வெளியாகிய செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு 'மெர்க்குரி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரம்யா நம்பீசன், சனாத் ரெட்டி, உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் முக்கிய சிறப்பு என்னவெனில் இந்த படத்தில் நடிக்கும் யாருமே வசனமே பேசாமல் நடித்துள்ளனர். சைலன்ஸ் மொழியில் இந்த படம் வெளியாகவுள்ளது. ஏற்கனவே உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 'பேசும்படம்' என்ற படம் வசனமே இல்லாமல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன் இசையில் திரு ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜின் பெஞ்ச் டாக்கீஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.