close
Choose your channels

'கட்டப்பாவ காணோ', 'குற்றம் 23' படங்களின் வசூல் விபரங்கள்

Monday, March 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'நாய்கள் ஜாக்கிரதை', 'ஜாக்சன் துரை' ஆகிய இரண்டு தொடர் வெற்றிகளை அடுத்து சிபிராஜ் நடித்த 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகியது. இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றதால் சராசரி ஒப்பனிங் வசூலை இந்த படம் பெற்றுள்ளது.

சென்னையில் இந்த படம் கடந்த வார இறுதியில் 14 திரையரங்குகளில் 115 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.20,28,670 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 70% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் கடந்த 3ஆம் தேதி வெளியாகி 3வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அருண்விஜய்யின் 'குற்றம் 23' திரைப்படம் இன்னும் நல்ல வசூலை கொடுத்து வருகிறது.

ஒரு மெடிக்கல் க்ரைம் கதை எப்படி இருக்க வேண்டும் என்று கச்சிதமாக வரையறுக்கப்பட்டு சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லுடன் செல்லும் இந்த படத்திற்கு ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளதால் மூன்றாவது வாரத்தில் சென்னையில் இந்த படம் 10 திரையரங்குகளில் 45 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.8,86,120 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.1,46,98,760 என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.