close
Choose your channels

சாருஹாசன் படக்குழுவினர்களுக்கு ஆச்சரியம் அளித்த கீர்த்திசுரேஷ்

Thursday, July 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கீர்த்திசுரேஷ், ஒரு கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவருடைய தாயார் மேனகா, ரஜினியின் 'நெற்றிக்கண்' உள்பட பல தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய தந்தை சுரேஷ் பிரபல மலையாள படத்தயாரிப்பாளரும் ஆவார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் பாட்டி, அதாவது மேனகாவின் தாயாரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் தாதாவாக நடித்து வரும் 'தாதா 87' என்ற படத்தில் சரோஜா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சரோஜா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் பாட்டியின் நடிப்பை நேரில் காண, படப்பிடிப்பு தளத்திற்கு கீர்த்தி சுரேஷ் வருகை தந்தார். கீர்த்தி சுரேஷின் வருகை 'தாதா 87' படக்குழுவினர்களுக்கு ஆச்சரியத்தை தந்ததாக கூறப்படுகிறது.

ஜனகராஜ் உள்பட பல பிரபலங்கள் நடிக்கும் 'தாதா 87' படத்தை விஜய்ஸ்ரீ இயக்கி வருகிறார். இந்த படத்தை எம்.கலைச்செல்வன் என்பவர் தயாரித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.