close
Choose your channels

ரஜினிக்கு நான் ஜோடியா? குஷ்பு ஆச்சரியம்

Wednesday, March 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதலில் தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாகவும், அதன்பின்னர் வித்யாபாலன் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்த செய்திகளை இயக்குனர் தரப்பில் இருந்து மறுக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
இதுகுறித்து குஷ்பு கூறியபோது, 'இந்த செய்தி எனக்கே புதியதாக இருக்கின்றது. கடந்த சில நாட்களாக இப்படி ஒரு செய்தி வெளிவருவதை நானும் கவனித்து கொண்டுதான் இருக்கின்றேன்' என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
இதில் இருந்து இப்போதைக்கு ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார்? என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
தனுஷ் தயாரிக்கவுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. படப்பிடிப்பு தொடங்குவதற்குள் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.