close
Choose your channels

தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆகும் அரசியல் திரைப்படம்

Friday, April 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியும், அதன் மூலம் கிடைத்த தேசிய விருதும் நடிகர் பாபிசிம்ஹாவை உச்சத்திற்கு கொண்டு போய் நிறுத்தியது என்பதை அனைவரும் அறிவோம். இந்த படத்திற்கு பின்னர் பாபிசிம்ஹாவுக்கு படங்கள் குவிந்தது.

இந்நிலையில் பாபிசிம்ஹா நடித்து முடித்த 'கோ 2' என்ற அரசியல் த்ரில் படம் ரிலீசுக்கு தயாராகிய நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோ 2' திரைப்படம் வரும் மே மாதம் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மே 16ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் அரசியல் சம்பந்தப்பட்ட படம் வெளிவருவது பாசிட்டிவ் ஆக கருதப்படுகிறது.
பாபிசிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சரத் இயக்கியுள்ளார். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.