close
Choose your channels

22 வருடங்களுக்கு பின் 'அமிதாப்' கனவை நனவாக்கிய குஷ்பு

Thursday, May 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான குஷ்பு தற்போது கணவர் மற்றும் மகள்களுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் தன்னுடைய சமூகவலைத்தளத்தில் வெனிஸ் நகரில் உள்ள கொண்டோலில் என்ற கால்வாயில் படகு சவாரி செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருந்தார். இரண்டு பக்கமும் பழமையான கட்டிடங்கள் நடுவில் தண்ணீரில் படகு சவாரி செய்யும் இந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதே லொகேஷனில்தான் அமிதாப்பச்சன், ஜீனத் அமன் நடித்த பாடல் காட்சி ஒன்று 'The Great Gambler' என்ற படத்திற்காக படமாக்கப்பட்டிருக்கும். இருவரும் படகு சவாரி செய்தவாறு பாடிய இந்த பாடல் புகழ்பெற்றது. இந்த பாடலில் வரும் ஜோடியை போலவே தானும் தன்னுடைய ஜோடியுடன் இதே இடத்தில் படகு சவாரி செய்ய வேண்டும் என்ற தனது கனவு 22 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நிறைவேறியுள்ளது என்று குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் குஷ்பு தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் ரிலாக்ஸாக அமர்ந்திருக்கும் செல்பி புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.