close
Choose your channels

'குற்றம் கடிதல்' ரிலீஸ் தேதி. காக்கா முட்டையின் வெற்றியை பெறுமா?

Monday, August 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பல பெற்ற திரைப்படமான 'காக்கா முட்டை' மாபெரும் வெற்றி அடைந்து பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பொதுவாக அவார்ட் படம் என்றாலே ஓடாத படம் என்று தமிழ் சினிமாவில் இருந்த செண்டிமெண்ட்டை உடைத்த படம் காக்கா முட்டை. அந்த வரிசையில் மற்றொரு விருது பெற்ற படமான 'குற்றம் கடிதல்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட 62வது தேசிய விருதுகள் அறிவிப்பில் சிறந்த படம் என்ற தேசிய விருதை பெற்ற படம் இந்த 'குற்றம் கடிதல்' என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 16வது மும்பை திரைப்பட விழாவில் கலந்து கொண்ட மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஆயிரத்தில் ஒருவன், ஆரண்ய காண்டம் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜிம்பாவே சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஒரே தமிழ்ப்படம் இதுதான் என்ற பெருமையை இந்த படத்திற்கு உண்டு.

பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது செப்டம்பர் 25 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.பிரம்மா இயக்கியிருக்கும் இந்த படமும் காக்கா முட்டை' படம் போல வெற்றி பெறும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.